உலகம்

பாக். முன்னாள் அதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் உடல் நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் பத்திரிகைகள் வெளியிட்ட செய்தியில், “முஷரஃப் இருதய பிரச்சனை மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக துபையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

முஷாரப் பாகிஸ்தானை ஆட்சி செய்தபோது 2007 நவம்பரில் அவசர நிலை பிரகடனம் செய்தார். இதற்கு எதிராக முஷாரப் மீது தேச துரோக குற்றச்சாட்டு கடந்த 2014-ல் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் துபாய் சென்ற முஷாரப் அங்கேயே தங்கிவிட்டார். தேசதுரோக வழக்கில் அவர் ஆஜராகாததை தொடர்ந்து அவரது பாஸ்போர்ட் மற்றும் அவருக்கு வழங்கப்படும் சில சலுகைகளை முடக்க அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு முதல் துபையில் மருத்துவ சிகிச்சைகாக தங்கி உள்ளார். தொடர்ந்து தேச விரோத வழக்கு தொடர்பாக முஷாராப்பை நாடு திரும்ப பாகிஸ்தான் அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்து வருகின்றனர். எனினும் முஷாரப் பாகிஸ்தான் திரும்பாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் மீண்டும் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் முஷாரப். முன்னதாக , பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றவருமான நவாஸ் ஷெரீப், உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக லண்டனில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT