உலகம்

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியது.

இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம், “அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள அமடிக்னக் தீவில் இன்று (திங்கட்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவாகியது” என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி பாதிப்பு ஏதும் இல்லை என்று பசிபிக் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

அலாஸ்காவில் கடந்த நவம்பர் மாதம் அலூட்டியன் மற்றும் ஆண்ட்ரியானோஃப் தீவுப் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.3 ஆகப் பதிவாகியது. இந்நிலையில் மீண்டும் அலாஸ்காவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2018 நவம்பர் மாதம் அலாஸ்காவில் 7.0 ரிக்டர் அளவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு சாலைகள் மற்றும் பாலங்கள் மிகுந்த சேதம் அடைந்தன.

SCROLL FOR NEXT