மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாகுதலில் 14 பேர் பலியாகினர்.
இதுகுறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ”புர்கினோ பாசோவில் ஞாயிற்றுக்கிழமை ஹண்டோகவுரா நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் குறித்து புர்கினோ ஃபாசோ அதிபர் தனது ட்விட்டர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், “ இது காட்டுமிரண்டித்தனமான தாக்குதல். தாக்குதலில் பலியானவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள் என்று பதிவிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த குறிப்பிட்ட தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்தத் தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகளின் கிளை தீவிரவாத இயக்கங்கள் நடத்தி இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரெஞ்சு காலனியான புர்கினா ஃபாசோ, உலகின் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ள நாடாகும். இந்நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இஸ்லாமியப் போராளிகள் கிளர்ச்சி செய்து வருகின்றனர்.
2015க்கு முன் எந்தவித வன்முறையும் இல்லாதிருந்த இந்நாட்டில் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் வடக்குப் பகுதியில் தொடங்கிய ஜிகாதிகளின் கிளர்ச்சி வேகமாக கிழக்கை நோக்கி அண்டை நாடான புர்கினா பாசோவிற்கும் வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.