உலகம்

லண்டன் பாலத்தில் கத்தியால் தாக்குதல்: துப்பாக்கிச்சூடு; மர்மநபர் கைது

செய்திப்பிரிவு

பிரிட்டன் தலைநகர் லண்டனில் கத்தியால் குத்தி தாக்கிய மர்ம மனிதனை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர்

லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளார். சரமாரியாக அவர் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.

மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய மர்ம நபரை பாலத்தின் அருகே துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT