தனது சமீபத்திய பயணத்தின்போது ஒரு சர்வதேச விமான நிறுவனத்தின் குழு உறுப்பினர் தன்னை இனரீதியாக அவமதித்ததாக பிரபல ராப் பாடகர் வில்.ஐ.எம் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் ராப் பாடகர் வில்.ஐ.எம் சிட்னிக்குப் பறந்துகொண்டிருக்கும்போது அவர் ஹெட்போனில் பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஹெட்போன் சத்தம் காரணமாக பொது அறிவிப்புகள் செய்யப்பட்டதை அவரால் கேட்க முடியவில்லை. இதனால் அவரும் அவரது குழுவினரும் அவமதிக்கப்பட்டுள்ளதாக அவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.
இதுகுறித்து வில்.ஐ.எம். தன் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
''ஆஸ்திரேலிய விமானமான குவாண்டாஸில் பணிபுரியும் விமானப் பணிப்பெண் ஒருவர் பிரிஸ்பேனில் இருந்து சிட்னி விமானத்தில் பயணித்தபோது இனரீதியாக காயப்படுத்தினார். அதிகப்படியான ஆக்ரோஷமான விமான பணிப்பெண்ணின் செயல் காரணமாக நானும் எனது குழுவினரும் அமோசமான சேவையை அனுபவித்ததாக வருந்துகிறோம். சர்வதேச விமானத்தில் இவ்வகையில் இனவெறி கொண்டு ஒரு ஊழியர் இருப்பார் என்று நான் நம்பவில்லை. ஆனால் அப்பெண் ஊழியர் நிற பேதத்துடன் நடந்துகொண்டது ஏமாற்றத்தை அளித்தது. இச்சம்பவத்தைக் குறித்து ட்விட்டரில் அப்பெண் பெயரைப் பதிவிட்டது ஒரு பிரச்சினையாகிவிட்டது. விமானத்திலிருந்து சிட்னியில் இறங்கும்போது போலீஸ்காரர்கள் என்னை அழைத்தனர்''.
இவ்வாறு வில்.ஐ.எம் தெரிவித்தார்.
ட்விட்டரில் வில்.ஐ.எம்மின் குற்றச்சாட்டுப் பதிவு
விமானத்தில் ஹெட்ஃபோன்கள் அணிந்திருக்கும்போது பொது அறிவிப்பைக் கேட்க முடியவில்லை. அதற்காக நிறத்தை காரணம்காட்டி விமர்சிப்பதை ஏறறுக்கொள்ளமுடியாது. பிரிஸ்பேனில் இருந்து சிட்னிக்கு @qantas ஐ #RacistFlightattendantஉடன் பறக்கும் போது நீங்கள் இப்படித்தான் வாழ்த்து பெற்றீர்கள் ... நான் விமானத்தை விட்டு இறங்கும்போது என்னைப் பின்தொடர்ந்து காவல்துறையை அனுப்பினார், . ... '' என்று மற்றொரு ட்வீட்டில் வில்.ஐ.எம் தெரிவித்தார்.
வில்.ஐ.எம்மின் புகாரை மறுத்து குவாண்டாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையை ஆஸ்திரேலிய பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், " இது பாடகரின் தவறான புரிதல். எங்கள் குழுவினரையும், விமானத்தில் உள்ள அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் அவர்கள் செய்யும் பெரிய பணிகளையும் நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். விமானத் தளத்தில் ஒரு தவறான புரிதல் ஏற்பட்டது, இது வில்.ஐ.எம் ஹெட்ஃபோன்கள் அணிந்துள்ளதால் யார் பேசுவதும் அவரால் கேட்கமுடியாது. அதனால்தான் குழுவினரின் வழிமுறைகளைக்கூட அவரால் கேட்க முடியவில்லை. நாங்கள் will.i.am ஐப் பின்தொடர்வோம், மேலும் சுற்றுப்பயணத்திற்கு அவரை வாழ்த்துவோம்" என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஆஸ்திரேலியாவின் விமானப் பணிக்குழு உதவியாளர்கள் சங்கத்தின் (FAAA) செயலாளர் டெரி ஓடூல், மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் விமானப் பணிப்பெண் பெயரை வெளியிட்டதற்காக ராப்பரை விமர்சித்தார்.
''விமானப் பணிக் குழுவினர் தங்கள் முதலாளியின் வழிகாட்டலைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதைச் செய்வதில், குழுவினர் சமூக ஊடகங்களில் இழிவுபடுத்தப்பட்டு தாக்கப்படுகிறார்கள் என்று தெரிகிறது. தங்கள் வேலையைச் செய்ததற்காக அவர்கள் பெயர் கெடுகிறது. மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் அவர்கள் பெயர்களைக் குறிப்பிட்டு விமர்சனம் செய்வது மிகவும் தவறானது. சம்பந்தப்பட்ட விமானப் பணிக் குழுவினரின் நலன், சம்பந்தப்பட்ட பிரபலங்களால் கருதப்படுவதில்லை என்று தோன்றுகிறது. பாடகர் இப்படி நடந்துகொண்டது வருத்தமாக உள்ளது'' என்று ஓடூல் தெரிவித்துள்ளார்.