உலகம்

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி

செய்திப்பிரிவு

காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியாகினர். பலியானவர்களில் 5 பேர் குழந்தைகள் என பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாலஸ்தீனம் அதிகாரிகள் தரப்பில், “இஸ்ரேல் ராணுவம் கடந்த சில நாட்களாக காசா பகுதியில் பலத்த தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியாகியுள்ளனர். இவர்கள்ல் 5 பேர் குழந்தைகள். இதுவரை காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 34 பேர் பலியாகியுள்ளனர்” என்று தெரிவிக்கபட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் இக்குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் தரப்பில், “வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேல்- பாலஸ்தீன எல்லைப் புறத்தில் காசா பகுதியில் இரண்டு நாட்களாக இஸ்லாமிக் ஜிகாத் தீவிரவாத அமைப்புக்கும் இஸ்ரேல் படைகளுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இதில் பாலஸ்தீன தீவிரவாதக் குழுவின் முக்கியத் தளபதியான பஹா அபு அல் அட்டா கொல்லப்பட்டார். மேலும், இஸ்ரேல் தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எகிப்து முயற்சியால் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே இரண்டு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

இந்நிலையில் மீண்டும் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் மீது வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

SCROLL FOR NEXT