மருத்துவத் துறையில் சாதனை படைத்து வரும் தமிழினப் பெருமக்களைச் சிறப்பிக்கும் வகையில், உலகத் தமிழ் அமைப்பு லண்டனில் விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக லண்டனில் இயங்கி வரும் உலகத் தமிழ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "2019 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய சிறப்பு மருத்துவ விருதுகள் வழங்கும் விழா நவம்பர் 22-ம் நாள் கொண்டாடவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 70 ஆண்டுகளில் பிரிட்டனின் மருத்துவத் துறையிலும் பொதுநல்வாழ்வுத் துறையிலும் நேஷனல் ஹெல்த் சர்வீஸ் (NHS) ஆற்றல்மிகு அரும்பணியாற்றி வருகிறது. நம் நாட்டின் ஒட்டுமொத்த நலவாழ்வையும் நேஷனல் ஹெல்த் சர்வீஸ் மேம்படுத்தியுள்ளது. இதனைச் சிறப்பிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 24-வது உச்சி மாநாட்டைக் கூட்டும் WTO_UK நிகழ்ச்சி நிகழவுள்ளது.
இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி மருத்துவ விருது வழங்கும் விழாவினைப் பெருஞ்சிறப்புடன் நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழா நவம்பர் 22 ஆம் நாள் லண்டனில் உள்ள ஹவுஸ் ஆஃப் லாட்ஸ் வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையில் நிகழவிருக்கிறது. இப்பெருவிழாவில் நேஷனல் ஹெல்த் சர்வீஸின் பங்காளர்கள், ஹெல்த்கேர் நிறுவனங்கள், மருத்துவக் கூட்டமைப்புகள் எனப் பல நிலைகளில் பங்கேற்கும் அனைவரையும் அன்புடன். வரவேற்று மகிழ்கிறோம்.
இவ்விழாவின் வழி மிகத் தனித்துவம் வாய்ந்த இந்திய - பிரித்தானிய உறவுகள் மேம்படுத்தப்படுவதுடன் புதிய வாய்ப்புகள் அரும்பும் என்று நம்புகிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.