பிரான்ஸில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் காரணமாக 30 வீடுகள் சேதமடைந்தன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியது.
பிரான்ஸில் தென்கிழக்கு பகுதியில் திங்கட்கிழமை ரிக்டர் அளவுகோலில் 5.4 அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை பிரான்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.
பாதிப்புகள் குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் தரப்பில், “ பிரான்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 4 பேர் காயமடைந்தனர். 30 வீடுகள் பாதிக்கப்பட்டன. பல வீடுகளில் சுவர்கள் பலத்த விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் கூரைகளும் பாதிப்படைந்தன. இந்த நிலநடுக்கம் காரணமாக லியான், மாண்ட்பில்லியர், அவிங்னான் ஆகிய நகரங்கள் பாதிப்படைந்தன. மேலும் 300க்கும் அதிகமானவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுளனர். மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடத்தப்பட்டன.” என்று தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரான்ஸில் மின்சாரம் முழுவதும் நிறுத்தப்பட்டது. மேலும் நிலநடுக்கம் காரணமாக பிரான்ஸ் அணு உலைகளை செயலிழக்க செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.