உலகம்

ஆப்கானிஸ்தானில் வெடிபொருள் வெடித்ததில் 5 தீவிரவாதிகள் பலி

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் வெடிபொருள் வெடித்ததில் 5 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து இன்று ஆப்கன் ராணுவம் தரப்பில், ''ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள குண்டஸ் மாகாணத்தில் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரைத் தாக்குவதற்கு வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது வெடிபொருள் முன்னரே வெடித்துள்ளது. இதில் 5 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று ஆப்கன் ராணுவம் தெரிவித்துள்ளது.

பலியானவர்கள் எந்தத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

ஆப்கனில் அமைதி ஏற்பட, தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கையில் பாகிஸ்தானும், தலிபான் பிரதிநிதிகளும் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

          
SCROLL FOR NEXT