உலகம்

அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடை: ஈரான் கண்டனம்

செய்திப்பிரிவு

மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனிக்கு நெருக்கமானவர்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடையை ஈரான் கண்டித்துள்ளது.

நவம்பர் 4 ஆம் தேதியன்று அமெரிக்கா ஈரான் அதிகாரிகள் மீது புதிய பொருளாதாரத் தடையை விதித்தது.

இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் கூறும்போது, “ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனிக்கு நெருக்கமான 9 பேர் மீது புதிய பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதித்துள்ளது. பொருளாதாரத் தடைக்கு ஆளான அனைவரும் காமெனியின் உயர் அதிகாரிகள். இதில் காமெனியின் மகனும் அடங்குவார். இதனை ஈரான் கண்டிக்கிறது” என்றார்.

ஈரான் - அமெரிக்கா மோதல்

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் அந்நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீதும் அதன் தலைவர்கள் மீதும் பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

மேலும், சமீபத்தில் சவுதி எண்ணெய் ஆலை கப்பல் தாக்கப்பட்டதன் பின்னணியில் ஈரான்தான் உள்ளது என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT