பிரதமர் மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று (சனிக்கிழமை) தாய்லாந்து செல்கிறார் மோடி.
இதனைத் தொடர்ந்து தாய்லாந்தில் நடை பெறும் ஆசியான் இந்திய மாநாடு , கிழக்காசிய மாநாடு மற்றும் பிராந்திய பொருளாதாரக் கூட்டமைப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார்.
பிரதமர் மோடி பயணம் குறித்து ஏஎன்ஐ, “முதல் நாள் பயணமாக இன்று தாய்லாந்திலுள்ள இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றுக்கிறார். ‘சவாஸ்தி பிஎம் மோடி’ என்ற பெயரில் தாய்லாந்தில் வாழும் இந்தியர்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். தாய் மொழியில் சவாஸ் என்றால் மரியாதைக்குரிய என்பது பொருளாகும்.
நவம்பர் 3 ஆம் தேதி நடக்கும் இந்திய - ஆசியான் மாநாட்டில் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா- வுடன் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் ஆசியா உறுப்பு நாடுகளிடையே உள்ள உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இந்த சந்திப்பில் இருவரும் கலந்துரையாட உள்ளனர்.
இது பிரதமர் மோடியின் ஏழாவது ஆசியான்- இந்தியா உச்சி மாநாடு மற்றும் ஆறாவது கிழக்கு ஆசியா உச்சி மாநாடு ஆகும். இதனைத் தொடர்ந்து தாய்லாந்து பிரதமர் அளிக்கும் விருந்தில் அந்நாட்டு தலைவர்களுடன் மோடி கலந்து கொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து 14- வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் மோடி கலந்து கொள்கிறார். இதில் பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான பிரச்சனைகள் பேசப்பட உள்ளன. மேலும் தாய்லாந்து - இந்தியா இடையேயான இருதரப்பு உறவு குறித்து இந்த பயணத்தில் பிரதமர் மோடி கலந்தாலோசிக்க உள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
தாய்லாந்து பயணத்தை நவம்பர் 4 ஆம் தேதி முடித்து கொண்டு மாலை இந்தியா திரும்ப இருக்கிறார் பிரதமர் மோடி.