உலகம்

பாகிஸ்தானில் கராச்சி - ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 65 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் கராச்சி - ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டத்தில் 46 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஏஎன்ஐ, “பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரகிம் யார் கான் பகுதிக்கு அருகே லியாகட்பூர் நகரில் கராச்சி - ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று (வியாழக்கிழமை) தீ விபத்து ஏற்பட்டது. ரயிலின் மூன்று பெட்டிகளில் தீ மளமளவெனப் பரவியது. இதன் காரணமாக ரயிலில் இருந்தவர்கள் தீயிலிருந்து தப்பிக்க வெளியே குதித்தனர். இதில் 46 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்பட்ட பெட்டிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் ரயிலில் இருந்த எரிவாயு குப்பி வெடித்ததன் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோசமான பாராமரிப்பு காரணமாக பாகிஸ்தான் ரயில்களில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட விபத்தில் 11 பேரும், செப்டம்பர் மாதம் ஏற்பட்ட விபத்தில் 4 பேரும் பலியாகினர்.

பாகிஸ்தானில் 2005 ஆம் ஆண்டு சிந்து மாகாணத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

SCROLL FOR NEXT