காபூல்
ஆப்கன் பொதுத் தேர்தல் முடிவுகள் நவம்பர் மாதம் 14-ம் தேதி வெளியாகும் என்று அந்நாட்டின் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
ஆப்கனில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தலிபான்களின் அச்சுறுத்தலை மீறியும் 90 லட்சத்துக்கு அதிகமான மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தார்கள்.
இதனைத் தொடர்ந்து அக்டோபர் 19 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தேர்தல் முடிவுகள் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பொதுத் தேர்தல் முடிவுகள் நவம்பர் 14-ம் தேதி வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆப்கனில் 18 ஆண்டுகளாக ஆப்கன் அரசுக்கும், தலிபான்களுக்கு இடையேயான போர் நடந்து வருகிறது. இதனை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதற்கான முயற்சியில் பாகிஸ்தானும், தலிபான் பிரதிநிதிகளும் இறங்கி உள்ளனர்.
இந்த நிலையில் ஆட்சி அமைக்கும் புதிய அரசின் மூலம் இதற்கு தீர்வு எட்டப்படும் என்று ஆப்கன் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.