உலகம்

நியூசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு 

செய்திப்பிரிவு

நியூசிலாந்தில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளது.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம், “ நியூசிலாந்தில் மில்ஃபோர்ட் தீவுப் பகுதிகளில் வியாழன் இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5. 9 ஆக பதிவாகியது. இந்த நில நடுக்கத்தின் ஆழம் 33 கிலோமீட்டர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் குவின்ஸ் டவுன், டுன்தின் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டது என்று நியூசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் நியூசிலாந்தின் வடகிழக்கில் தொலைதூரம் உள்ள கெர்மடெக் தீவுகள் அருகே அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகவும் பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுகப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டது.

SCROLL FOR NEXT