உலகம்

கலிபோர்னியாவில் காட்டுத் தீ: இருவர் காயம்

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு இருவர் காயமடைந்தனர். பல ஏக்கர் நிலங்கள் தீக்கிரையாகின.

இதுகுறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இந்தக் காட்டுத் தீக்கு இருவர் காயமடைந்தனர். 40 ஏக்கர் அளவிலான நிலங்கள் காட்டுத் தீக்கு இரையாகியுள்ளன.

மேலும், மலைப் பகுதிகளைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் காட்டுத் தீயால் சேதம் அடைந்துள்ளன.

தொடர்ந்து காட்டுத் தீயை அணைக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஹெலிகாப்டர்களைக் கொண்டு மலைப் பகுதிகளில் நீர் பாய்ச்சப்படுகிறது” என்று தெரிவித்தார்.

கலிபோர்னியா மாகாணத்தின் வடக்குப் பகுதியில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஏற்பட்ட காட்டுத் தீக்கு 84 பேர் பலியாகினர்.
மேலும் சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் தீக்கிரையாகின. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நெருப்பில் நாசமாகின என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT