ஈரான் தென்பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியது.
இதுகுறித்து ஏஎன் ஐ வெளியிட்ட செய்தியில், “ ஈரான் தென்பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தின் மையம் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் 2 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியது” கூறப்பட்டுள்ளது.
நிலநடுக்க அதிர்வுகள் துபை போன்றவற்றிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நில நடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
2017 ஆம் ஆண்டு இராக் - ஈரான் எல்லையில் ரிக்டர் அளவில் 7.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தில் 700-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2003 ஆம் ஆண்டு ஈரானில் கெர்மன் மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்திற்கு 23,000 பேர் பலியாகினர்.