தாய்லாந்தில் ராணுவப்புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதாக, அந்நாட்டு ராணுவத் தலைமைத் தளபதி பிரயுத் சான் ஓ சா வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகை யில், “தேசத்தில் ஸ்திரத்தன் மையை ஏற்படுத்துவதற்காக ஆயுதப்படை, ராணுவம், காவல்துறை ஆகியவை இணைந்த தேசிய அமைதி பேணும் குழு அதிகாரத்தைக் கைப்பற்றியது” எனத் தெரிவித் துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன் ராணுவச் சட்டத்தை தாய்லாந்து ராணுவம் அமல்படுத்தியது. அப்போதே ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்ட போதும், ராணுவப்புரட்சி ஏற்படவில்லை, ஆட்சிக்கவிழ்பில் ஈடுபடவில்லை என ராணுவ தலைமைத் தளபதி பிரயுத் சான் ஓ சா தெரிவித்திருந்தார்.