ஆப்கானிஸ்தானில் பொதுத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாது என்று ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆப்கான் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் ஹபிப் ரஹ்மான் கூறும்போது, “ ஆப்கானில் நாளை வெளியாக இருந்த பொதுத் தேர்தல் முடிவுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரந்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சனிக்கிழமை வெளியாகாது. நாங்கள் அறிவித்த தேதியில் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று முயற்சித்தோம். ஆனால் இயந்திரங்கள் சில நாட்களாக இயங்க வில்லை” என்று தெரிவித்தார்.
ஆப்கான் தேர்தல் முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் 10 நாட்களில் முதற்கட்ட முடிவுகள் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆப்கனில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி பொத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தலிபான்களின் அச்சுறுத்தலை மீறியும் 90 லட்சத்துக்கு அதிகமான மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தார்கள்.
ஆப்கனில் 18 ஆண்டுகளாக ஆப்கான் அரசுக்கும், தலிபான்களுக்கு இடையேயான போர் நடந்து வருகிறது. இதனை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதற்ககான முயற்சியில் பாகிஸ்தான் இறங்கி உள்ளது. இந்த நிலையில் அடுத்து வரும் புதிய அரசின் மூலம் இதற்கு தீர்வு எட்டப்படும் என்று ஆப்கான் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.