கிரேக்க கணித விகிதத்தின் அடிப்படையில் சூப்பர் மாடலான பெல்லா ஹடிட் உலகிலேயே அழகான பெண் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த முடிவை "Golden Ratio of Beauty Phi Standards" (முக அளவின் விகிதாச்சாரம் உள்ளிட்டவை இதில் அடங்கி உள்ளது) என்ற கிரேக்க கணக்கீடுகளின் அடிப்படையில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை லண்டனின் மிகப் பிரபலமான முக ஒப்பனை அறுவை சிகிச்சை நிபுணர் ஜூலியன் டி சில்வா சோதித்துப் பார்த்து தெரிவித்துள்ளார். இதன் முடிவில் அழகு சார்ந்து கிரேக்க கணித அளவீடுகளில், 23 வயதான சூப்பர் மாடலான பெல்லா ஹடிட் 94.5% ஒத்துப் போகிறார். இதனைத் தொடர்ந்து ஹடிட் உலகின் அழகிய பெண்மணியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவரைத் தொடர்ந்து பாப் பாடகி பியான்சே இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மூன்றாவது இடம் அமெரிக்க நடிகை ஹம்பர் ஹெர்டுக்கு கிடைத்துள்ளது.
இதுகுறித்து ஜூலியன் டி சில்வா கூறும்போது, “முகத்தின் அனைத்துக் கூறுகள், உடல் வடிவம் என அனைத்தும் அளவிடப்படும் போது பெல்லா ஹடிட்தான் வெற்றியாளராக இருக்கிறார்” என்று தெரிவித்தார்.