சீனாவில் ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலியாகினர். பலருக்கும் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “சீனாவின் தென் பகுதியில் உள்ள குவாங்ஸி பகுதியில் ரசாயனத் தொழிற்சாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’’ என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் தொடரும் ரசாயனத் தொழிற்சாலை விபத்துகள்
சீனாவின் கிழக்குப் பகுதியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ரசாயனத் தாக்குதலில் 78 பேர் பலியாகினர். 600 பேர் வரை காயமடைந்தனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு சீனாவில் தியாஜின் வேதித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தொடர் வெடி விபத்தில் 165 பேர் பலியாகினர். 2016 ஆம் ஆண்டு சீனாவில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட ரசாயன வாயு வெளியேற்றத்தில் 23 பேர் பலியாகினர்.
சீனாவில் தொழிற்சாலை மற்றும் சுரங்கங்களில் சரியான பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாததால் அங்கு விபத்து ஏற்படுவது தொடர்ந்து வருகிறது.