2019 ஆம் ஆண்டுகான அமைதிக்கான நோபல் பரிசை எத்தியோபிய பிரதமர் அபி அகமத் அலி பெறுகிறார்.
சுவீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2019 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமத் அலி பெறுகிறார்.
எரிட்ரியா போன்ற அண்டை நாடுகளுடன் எல்லைப் பிரச்சனையை அமைதியான முறையில் தீர்வு கண்டது மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகாக அபி அலி அகமத்துக்கு 2019 ஆம் ஆண்டுக்கான அமைத்திக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக நோபல் பரிசுகளை வழங்கும் அகாடமி தெரிவித்துள்ளது.
எத்தியோப்பியா - எரிட்ரியா நாடுகள் இடையே எல்லை பிரச்சனை காரணமாக நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது. இதன் காரணமாக 1998 - 2000 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே போரும் ஏற்பட்டது.
20 ஆண்டுகளாக நிலவி வந்த இரு நாடுகளுக்கைடையேயான மோதலுக்கு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமத் முயற்சியால் கடந்த ஆண்டு அமைதி ஒப்பந்தத்தின் மூலம் திர்வு காணப்பட்டது.
யார் அபி அகமத்?
அபி அகமத் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமராக தேந்தெடுக்கப்பட்டது முதல் பல்வேறு சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை எத்தியோப்பியாவில் எடுத்து வந்தார். முடக்கப்பட்ட ஏராளமான டிவி சேனல்கள், இணையதளங்கள் மீதான தடையை நீக்கினார்.
மேலும் சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க் கட்சி உறுப்பினர்களை விடுதலை செய்தார்.
எத்தியோப்பியாவில் மக்களிடம் செல்வாக்குமிக்க தலைவராக வளர்ந்து வருகிறார் அபி அகமத்.
நோபல் பரிசு இந்திய ரூபாய் மதிப்பில் 6 கோடியே 52 லட்சத்து 19 ஆயிரத்து 310 ரூபாய் பரிசுத் தொகையும், தங்க மெடலும் கொண்டது.
இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள நோபல் பரிசுகளின் விவரம்:
அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வில்லியம் காலின், கிரேக் செமென்ஸா, இங்கிலாந்தைச் சேர்ந்த பீட்டர் ராட்கிளிஃப் ஆகியோருக்கு 2019-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
2019-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு ஜேம்ஸ் பீபிள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் குவெலோஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஜான் கூட்எனஃப், இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பான் விஞ்ஞானி அகிரா யோஷினோ ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
2019-ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு ஆஸ்திரியாவை சேர்ந்த எழுத்தாளர் பீட்டர் ஹேண்ட்ஹே தேர்வு செய்யப்பட்டுள்ளார். மனித அனுபவத்தின் தனித்துவத்தை மொழியில் கூர்மையுடன் ஆராய்ந்தவர் பீட்டர் என சுவீடன் நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.