உலகம்

சீனா வந்தடைந்தார் பாக்.பிரதமர் இம்ரான் கான்

செய்திப்பிரிவு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக சீனா வந்தடைந்தார்.

சீனா சென்றடைந்த இம்ரான் கானை அந்நாட்டின் கலாச்சாரத் துறை அமைச்சர், பாகிஸ்தானுக்கான சீனத் தூதர் ஆகியோர் வரவேற்றனர்.

இம்ரான் கான் பயணம் குறித்து ஏபிபி வெளியிட்ட செய்தியில், ''இம்ரான் கான் இந்தப் பயணத்தில் அதிபர் ஜி ஜின்பிங் உட்பட சீனாவின் மூத்த தலைவர்களைச் சந்தித்துப் பேச இருக்கிறார். மேலும் சீனா - பாகிஸ்தான் இரு தரப்பு உறவு மற்று உள்நாட்டு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தச் சந்திப்பில் பொருளாதாரம், விவசாயம், தொழிற்சாலைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவுள்ளன” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இச்சந்திப்பில் காஷ்மீர் தொடர்பாகவும் இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்ற நிலை குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணம் சீனா - பாகிஸ்தான் இடையே நிலவும் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரதமராகப் பதவியேற்றது முதல் இம்ரான் கான் சீனாவுக்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும்.

SCROLL FOR NEXT