மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் தாக்கியதால் மரணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 11,250-ஐ கடந்துள்ளதாக உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் பரவியது முதல் இதுவரை 27,643 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். லைபீரியாவில் மொத்தம் 10,666 பேர்களில் 4,806 பேர் பலியாகியுள்ளனர்.
லைபீரியாவுக்கு அடுத்தபடியாக சியாரா லியோனில் 3,947 பேர் மரணமடைந்துள்ளனர், கினியாவில் 2,506 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும், மாலி, நைஜீரியா, செனெகல், ஸ்பெயின், பிரிட்டன், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் தனித்தனியாக எபோலா வைரஸ் பீடிக்கப்பட்டவர்கள் இருந்து வருகின்றனர்.