தீவிரவாதி லக்வி விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சாதகமாக சீனா செயல்படுவது குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பிரதமர் நரேந்திர மோடி கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
கடந்த 2008 -ல் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 164 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஜகியூர் ரஹ்மான் லக்வி மூளையாகச் செயல்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக இந்தியா, அமெரிக்கா அளித்த நிர்பந்தம் காரணமாக லக்வியை பாகிஸ் தான் போலீஸார் கைது செய்தனர். ஆனால் அவருக்கு எதிராக நீதி மன்றத்தில் போதிய ஆதாரங்களை அளிக்காததால் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் பாகிஸ் தான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐ.நா. சபையில் இந்தியா முறையிட்டுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. ஆனால் பாகிஸ்தானுக்கு சாதகமாக ஐ.நா. சபையில் சீனா வாதாடி வருகிறது.
ஜி ஜின்பிங்
இந்தப் பின்னணியில் ரஷ்யா வின் உஃபா நகரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேற்றுமுன் தினம் சந்தித்துப் பேசினர். இச் சந்திப்பு 95 நிமிடங்கள் நீடித்தது.
அப்போது தீவிரவாதி லக்வி விவகாரத்தில் சீனாவின் நிலைப் பாடு குறித்து பிரதமர் மோடி கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
இதுகுறித்து இந்திய வெளியுற வுத் துறைச் செயலாளர் ஜெய் சங்கர் கூறியதாவது: மும்பை தாக்கு தலில் லக்வியின் தொடர்பு குறித்து அனைத்து நாடுகளுக்கும் தெரி யும். இந்த விவகாரம் குறித்து இந்திய, சீன தலைவர்கள் விவாதித் துள்ளனர். தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்படும்.
சீனா, பாகிஸ்தான் இடையிலான வர்த்தக சாலைத் திட்டம் பாகிஸ் தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கடந் துச் செல்வது குறித்தும் இந்தியா வின் எதிர்ப்பை பதிவு செய்துள் ளோம். இவை தவிர எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோ சனை நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சீன அதிபர் ஜி ஜிங்பிங் கூறிய போது, ரயில்வே துறை, தொழிற் பூங்கா, ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல் படும் என்று தெரிவித்துள்ளார்.
புதின் - மோடி சந்திப்பு
முன்னதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, வரும் 2016-ம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம் அளிக்கப்படும் என்று புதின் உறுதியளித்தார்.
தற்போது சீனா, ரஷ்யா, கஜகஸ் தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் எஸ்.சி.ஓ. அமைப்பில் உறுப்பினர் களாக உள்ளன. அடுத்த ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் நிரந்தர உறுப்பினர்களாக சேர்க் கப்பட உள்ளன.
பிரிக்ஸ் மாநாடு தொடக்கம்
ரஷ்யாவின் உஃபா நகரில் பிரிக்ஸ் மாநாடு நேற்றுமுன்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர் களாக உள்ள பிரேசில் அதிபர் தில்மா ரூசெப், ரஷ்ய அதிபர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்ஆப்பிரிக்கா அதிபர் ஜேக்கப் ஜூமா ஆகியோர் பங்கேற்றனர்.
பிரிக்ஸ் வங்கியின் செயல்பாடு, எதிர்கால திட்டம் குறித்து மாநாட்டில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக பிரிக்ஸ் வங்கி சார்பில் அந்தந்த நாடுகளின் பணத்திலேயே கடன் வழங்குவது குறித்து முக்கியமாக ஆலோசனை நடத்தப்பட்டது.
ரஷ்ய அதிபர் புதின் பேசிய போது, டாலரின் பயன்பாட்டை தவிர்த்து உள்நாட்டு பணத்தில் வர்த்தகம் மேற்கொள்ளுமாறு அறி வுறுத்தினார். உஃபாவில் தற்போது 7-வது பிரிக்ஸ் மாநாடு நிறைவு பெற்றுள்ளது. எட்டாவது பிரிக்ஸ் மாநாட்டை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியா நடத்துகிறது.