எகிப்தில் ஓடும் நைல் நதியில் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்து குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.
எகிப்து தலைநகர் கெய்ரோ அருகே உள்ள கிசா என்ற பகுதியில் ஓடும் நைல் நதியில் 30 பேருடன் சென்று கொண்டிருந்த சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 15 பேர் பலியானதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காணாமல்போனவர்களை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர். விபத்தை அடுத்து சுற்றுலா படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். 25 பேர் படகு கொண்ட மீட்பு குழுவினர் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நைல் நதியில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
படகில் சுற்றுலா சென்றவர்களின் பலரின் நிலைமை இன்னும் தெரியாமல் உள்ளதால் உறவினர்கள் கலக்கத்தில் உள்ளனர்.