ஆப்கானிஸ்தானில் திருமண விழாவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 21 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான பாக்லானில் நடந்த நேற்று இரவு நடந்த திருமண விழாவில் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதற்கு மறு தரப்பும் தாக்குதல் நடத்த சண்டை முற்றியது.
இந்தத் துப்பாக்கிச் சண்டையில் விழாவுக்கு வந்திருந்த சிறுவர்கள், பெரியவர்கள் என 21 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10 பேர் காயமடைந்ததாக மாகாண போலீஸார் தெரிவித்தனர். இந்த மோதல் சண்டை சம்பவத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.