எலும்பும் தோலுமாக உள்ள டிக்கிரி யானை 
உலகம்

எலும்பும் தோலுமாக சமூக தளங்களில் வைரலாகி உலக மக்களின் அனுதாபத்தைப் பெற்ற ‘டிக்கிரி’ யானை 70-வது வயதில் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

எஸ். முஹம்மது ராஃபி

ராமேசுவரம்

இலங்கையில் உள்ள கண்டி யில் ஆண்டுதோறும் ஸ்ரீ தலதா மாளிகையில் பெரஹரா என்ற பெயரில் பவுத்த விழா நடைபெறுகிறது. மிகவும் புகழ்பெற்ற இவ்விழாவின் போது, புத்தரின் புனித சின்னங் கள் தெருக்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுவது மிக முக்கிய நிகழ்வாகும். இந்த விழாவை அலங்கரிக்கும் வகை யில் சிங்கள பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், அலங்கரிக்கப்பட்ட யானைகளும் இடம்பெறுவதுண்டு.

இந்த ஆண்டு கண்டியில் நடைபெற்ற பெரஹரா விழாவில் 'டிக்கிரி' என்ற 70 வயது யானை கலந்துகொண்டது. இந்த யானை யைப் பற்றி கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி உலக யானைகள் தினத்தை முன்னிட்டு தாய்லாந்தைச் சேர்ந்த 'சேவ் எலிஃபன்ட் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பு தனது பேஸ்புக் சமூக வலைதளப் பக்கத் தில் கீழ்க்காணும் பதிவை செய்தது.

“டிக்கிரி என்ற பெண் யானை கண்டியில் நடைபெறும் பெர ஹரா விழாவில் பயன்படுத்தப் படும் 60 யானைகளில் ஒன்று. எலும்பும் தோலுமாக உள்ள இதன் நிலை மிகவும் மோச மாக உள்ளது. 10 நாட்கள் நடை பெறும் விழாவில் காலையிலும், மாலையிலும் பொது மக்களின் கூச்சல், வெடிகளின் அதிர்வுகள் மற்றும் புகைகளுக்கு மத்தியில் ஆசிர்வாதம் வழங்கியவாறு ஊர்வலமாக பல கிலோ மீட்டர் தினமும் நடந்து நள்ளிரவே தனது இருப்பிடத்துக்கு திரும்புகிறது. அலங்கார ஆடையுடன் டிக்கிரி யானை இருப்பதால் அதன் எலும்பு உடம்பு யாருக்கும் தெரிவதில்லை" என்று அதில் கூறப்பட்டிருந்தது.

டிக்கிரி யானை எலும்பும் தோலு மாக உள்ள படத்தை சமூக வலை தளங்களில் பலரும் பகிர்ந்து தங் கள் வேதனையை வெளிப்படுத்தி யதுடன் யானையை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தனர். இதனால் இந்த யானை உலக மக்களின் அனுதாபத்தைப் பெற்றது. இந்நிலையில் செவ் வாய்க்கிழமை மாலை அந்த யானை உயிரிழந்தது. அதன் மேல் அன்பு கொண்ட மக்களை சோகத்தில் இது ஆழ்த்தியுள்ளது.

SCROLL FOR NEXT