பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சி நடந்த என்ஆர்ஜி ஸ்டேடியத்தை கைகோத்தபடி சுற்றி வந்தனர்.படம்: பிடிஐ 
உலகம்

இந்தியர்கள் வாக்குகளை கவர ட்ரம்ப் திட்டம்?

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்தான், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற ஹவுடி மோடி நிகழ்ச்சியில், பிரதமர் மோடி யுடன் ட்ரம்பும் பங்கேற்றுள்ளார். இந்திய-அமெரிக்கர்களின் வாக்கு களைக் கவருவதற்காகவே குடியரசு கட்சியைச் சேர்ந்த ட்ரம்ப் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

இதற்கு ஏற்றார்போல, இந் நிகழ்ச்சியில் பேசிய மோடி, ‘ட்ரம்ப் மீண்டும் அதிபராவார்’ என நம்பிக்கை தெரிவித்தார். அப் போது ட்ரம்ப் புன்னகைத்தார்.

அமெரிக்காவில் சுமார் 40 லட்சம் இந்தியர்கள் வசிக் கின்றனர். இவர்களில் பெரும் பாலானவர்கள் அதிபர் தேர்தலின் போது, ஜனநாயகக் கட்சிக்கு வாக் களிப்பதே வழக்கமாக இருந்து வருகிறது.

‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சுமார் 25 நிமிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்திய வம்சாவளியினர் முக்கிய பங்காற்றி வருகின்றனர். இரு நாடுகளுக்கிடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளாக மேலும் வலுவடைந்துள்ளது.

குறிப்பாக பிரதமர் மோடி அமெரிக்காவின் சிறந்த நண்பர். அவர் இந்தியாவின் வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றி வருகிறார். மோடியின் பொருளாதார சீர் திருத்த நடவடிக்கையால் 30 லட் சம் இந்தியர்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், வலி மையான, இறையாண்மை மிக்க இந்தியாவை உலகம் பார்க்கிறது. நம் நாட்டை மேலும் வளமாக்க மோடியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.

தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்து பொதுமக்களை பாது காக்க வேண்டும் என்பதில் இரு நாடுகளும் உறுதியாக உள்ளன.

இவ்வாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசினார்.

SCROLL FOR NEXT