அமெரிக்காவின் ஹூஸ்டன் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அந்த நாட்டின் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர். அப்போது அமெரிக்க பெண் அதிகாரி வழங்கிய பூச்செண்டில் இருந்து மலர்கள் அடங்கிய ஒரு தண்டு கீழே விழுந்தது. அதை பிரதமர் மோடி குனிந்து எடுக்கிறார். 
உலகம்

கீழே விழுந்த மலரை எடுத்த மோடி: ஹூஸ்டன் வரவேற்பில் அதிகாரிகள் ஆச்சரியம்

செய்திப்பிரிவு

ஹவுஸ்டன்

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை யொட்டி கடந்த 2014 அக்டோபர் 2-ம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

சொல்வது மட்டுமல்லாமல் அவரே தூய்மைப் பணிகளிலும் ஈடுபட்டு வரு கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் துடைப் பத்தை எடுத்து துப்புரவு பணிகளை மேற் கொண்டிருக்கிறார்.

‘ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சென்றார். அங்குள்ள ஜார்ஜ் புஷ் விமான நிலையத்தில் இந்திய, அமெரிக்க தூதரக அதிகாரிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அமெரிக்க பெண் அதிகாரி, பிரதமருக்கு பூச்செண்டு கொடுத்து கைகுலுக்கினார். இதில் பூச்செண்டுகளில் இருந்து மலர்கள் அடங்கிய ஒரு தண்டு கீழே விழுந்தது.

பிரதமருக்கான மிடுக்கோடு நடந்து வந்த மோடி எதையும் பொருட்படுத்தா மல் கீழே குனிந்து தரையில் விழுந்து கிடந்த அந்த தண்டை எடுத்தார். அதை அருகில் இருந்த பாதுகாப்புத் துறை அதிகாரியிடம் கொடுத்தார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுவாக அணிவகுப்பு மரியாதை அல்லது வரவேற்பின்போது இதுபோல் எதுநடந்தாலும் தலைவர்கள் பெரும்பாலும் கண்டுகொள்ளமாட்டார் கள். ஆனால் மோடி கீழே குனிந்து மலரை எடுத்து கொடுத்த எளிமையை பார்த்து அதிகாரிகள் ஆச்சரியம் அடைந்தனர்.

மேலும் வெளிநாட்டிலும் தூய்மையின் தூதராக பிரதமர் மோடி செயல்படுகிறார் என்று சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

SCROLL FOR NEXT