உலகம்

வடகொரியாவுக்கு பயணம் செய்ய முடியாது: ட்ரம்ப்

செய்திப்பிரிவு


குறுகிய காலத்தில் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவுக்கு வருமாறு அந்நாட்டு அதிபர் கிம் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அழைப்பு விடுத்தாக தகவல்கள் வெளியாகியது.

இது தொடர்பான ட்ரம்பிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ட்ரம்ப் வெள்ளைமாளிகையில் பதில் கூறும்போது, “அமெரிக்கா - வடகொரியா இரு நாடுகள் இடையே நட்புறவு நீடிக்கிறது. ஆனால் அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. நான் எதிர்காலத்தில் அப்போது உள்ள சூழலை பொறுத்து வடகொரியாவுக்கு நிச்சயம் பயணிப்பேன். கிம்மும் அமெரிக்காவர விரும்புகிறார். ஆனால் அது இப்போது இல்லை. நாங்கள் இதனை நோக்கி செல்ல இன்னும் சில காலம் வேண்டி இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ட்ரம்ப்பை வடகொரியா வருமாறு வடகொரிய அதிபர் கிம் அழைப்பு விடுத்திருப்பதாக தென்கொகொரியா ஊடகங்களில் வெளியாகியது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

கடந்த பிப்ரவரியில், வியட்நாமிய தலைநகரான ஹனோய் நகரில் ட்ரம்ப் மற்றும் கிம் ஆகியோருடைக்கிடையே நடைபெற்ற இரண்டாவது சந்திப்பின்போது அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இதில் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT