வாஷிங்டன்
வாஷிங்டனில் உள்ள ஜாயின்ட் பேஸ் லெவிஸ் மெக்கார்டு படைத் தளத்தில் யூத் அப்யாஸ் எனப்படும் நவீன ரக ஆயுதங்களோடு இந்தியா, அமெரிக்கா ராணுவ வீரர்கள் கூட்டாக போர்ப் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து அமெரிக்கா பாதுகாப்புத்துறை கூறியுள்ளதாவது:
இந்தியா புதிய நவீன ரக ஆயுதங்களை களமிறக்கி வருகிறது. சினூக் எனப்படும் இரட்டை என்ஜின் உள்ள போர் ஹெலிகாப்டர் மற்றும் ஹொவிட்சர்கள் எனப்படும் நவீன ரக பீரங்கி ஆகியவற்றில் போதிய பயிற்சி பெறுவதற்காக ராணுவ வீரர்களை அமெரிக்க அனுப்பியுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் ஜாயின்ட் பேஸ் லெவிஸ் மெக்கார்டு படைத்தளத்தில் இதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்திய ராணுவ வீரர்கள் பங்கேற்கும் 'யுத் அபியாஸ்-2019' (போர்ப் பயிற்சி-2019) கடந்த செப்டம்பர் 5 அன்று தொடங்கியது. இக் கூட்டுப் பயிற்சி வருகிற செப்டம்பர் 18 வரை தொடரும். இது இந்தோ-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும்.
அமெரிக்காவிடமிருந்து சினூக் மற்றும் அல்ட்ரா-லைட் ஹோவிட்சர்கள் ஆகிய நவீன ரக ஆயுதங்கள் இந்தியாவால் வாங்கப்பட்டுள்ளன, இவை இரண்டும் அக்டோபர் மாதம் சீன எல்லைக்கு அருகிலுள்ள அருணாச்சல பிரதேசத்தில் ஹிம்விஜய் போர்ப் பயிற்சியின் போது பயன்படுத்தப்படும்.
அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து கூட்டுப் போர்ப் பயிற்சியில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. இரு நாடுகளின் இந்தக் கூட்டுப் பயிற்சி 15வது முறையாக நடைபெறுகிறது.
இரு படைகளும் கூட்டாக பயிற்சி, திட்டமிடல் மற்றும் மாறுபட்ட இயற்கையின் அச்சுறுத்தல்களை சமநிலைப்படுத்துதலுக்கான தொடர்ச்சியான மேம்பட்ட செயல்பாடுகளை செயல்படுத்துகின்றன.
முடிவில், ஐ.நா ஆணையின் கீழ் செயல்பாட்டு அமைப்பில் இரு நாடுகளும் இணைந்து ஒரு கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படும்.
-ஏஎன்ஐ