சிரியாவில் நடந்தப்பட்ட கார் குண்டுவெடிப்பில் 11 பேர் பலியாகினர். பலர் பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் கூறும்போது, “சிரியாவில் வடக்கு பகுதியில் உள்ள அலெப்போ மாகாணத்தில் அர் ராய் கிராமத்தில் மருத்துவமனை அருகிலிருந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 11 பேர் பலியாகினர். 20க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
அல் ராய் கிமாரம் சிரிய - துருக்கி எல்லையோர பக்கத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் துருக்கி ஆதரவு தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் மாகாணத்தில் இறுதிச்சண்டை நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வேறு நாட்டுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
சிரியாவில் நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை, வளர்ந்த நாடுகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனது. இந்த நிலையில். துருக்கிக்கும், சிரியாவுக்கும் இடையே சில நாட்களாக மோதல் வலுத்து வருகிறது.