உலகம்

சவுதி எண்ணெய் நிறுவனங்களை தாக்கிய ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்

செய்திப்பிரிவு

சவுதியில் உள்ள இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சவுதியில் உள்ள அபாகே பகுதியில் உள்ள அராம்கோ எண்ணெய் நிறுவனத்திலும், குராய்ஸ் எண்ணெய் நிறுவனத்திலும் எதிர்பாராத விதமாக வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து சவுதி அரேபியாவின் அதிகாரப்பூர்வமான செய்தி நிறுவனம் கூறும்போது, “
தொடர்ந்து தாக்குதல் ஏற்பட்ட பகுதியில் அதிகாரிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலை ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாக அதன் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏனினும் தாக்குதலை யார் நடத்தினார்கள் என சவுதி தரப்பில் இதுவரை பதிலளிக்கப்படவில்லை.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. ஏமனில் நடக்கும் உள் நாட்டு போருக்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT