இந்தியாவில் டெங்கு மற்றும் சிக்குன் குனியா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை, ஆவணங்களில் உள்ளதை விட பல மடங்கு அதிகம் என அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மேரிலேண்டில் உல்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் புளூம்பெர்க் பொது சுகாதாரப் பள்ளியின், கொள்ளை நோய்ப் பிரிவு ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பான ஆய்வை மேற்கொண் டனர். சென்னையில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 1,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில் பெரும் பாலானவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர் களுக்கு டெங்கு இருந்ததாக பதிவு செய்யப்படவில்லை.
இந்த ஆய்வை மேற்கொண்ட வர்களின் ஒருவரான இஸெபல் ரோட்ரிக்ஸ் பர்ராகுவெர் கூறிய தாவது: உண்மையான பாதிப்பு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. மக்களுக்கு இந்நோய் பற்றி விழிப்புணர்வு இல்லை. பங்கேற் பாளர்களிடம், நீங்கள் என்றா வது டெங்குவால் பாதிக்கப்பட் டிருக்கிறீர்களா எனக் கேட்டதற்கு ஒரு சதவீதம் பேர் மட்டுமே ஆம் என பதில் கூறினர். ஆனால், உண்மையில் 93 சதவீதம் பேர் டெங்கு தாக்குதலுக்கு ஆளானவர் கள். 1940-ம் ஆண்டிலிருந்தே இந்தியாவில் டெங்கு பாதிப்பு இருந்தாலும், சமீப காலமாகத்தான் இந்நோய் குறித்து அறிந்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் 23 சதவீதம் பேர் முதன்முறையாக டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். சென்னை யில் மட்டும் ஆண்டு தோறும் 2.28 லட்சம் பேர் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நோய் பரவல் வீதம் மிக மிக அதிகமானதாகும். காய்ச்சல், மூட்டு வலி, தலைவலி, உடம்பு வலி, மூட்டு வீக்கம், தோல் அரிப்பு போன்றவை சிக்குன் குனியாவின் அறிகுறிகளாகும்.
வெப்ப மண்டல, வெப்ப அயல் மண்டல பகுதிகளில் டெங்கு அதிகமாக பரவுகிறது. ஆண்டுக்கு 40 கோடி பேர் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். இதுவரை டெங்கு வைரஸுக்கு தடுப்பூசி கண்டறியப்படவில்லை. டெங்கு வைரஸ் இரண்டாவது முறை தாக்கினால் அது மிக அபாயகரமான விளைவை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னையில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 1,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.