ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள் மற்றும் தலிபான்கள் மோதலில் சுமார் 100 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆப்கான் ஊடகங்கள்,”ஆப்கானில் மேற்கில் உள்ள வர்தாஜ் மாவட்டத்தை ஆப்கான் அரசுப் படைகள் கைபற்றியுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் அரசுப் படைகள் மற்றும் தலிபான்கள் இடையே நடந்த தாக்குதலில் 100 தலிபான்கள் பலியாகினர்” என்று தெரிவித்துளன.
இதனை ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும் ஆப்கான் அரசு படைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற தகவல் இதுவரை வெளிவரவில்லை.
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது.இதில் சில நாட்களுக்கு தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண தலிபான்களுடன் ஆப்கானிஸ்தான் அரசும், அமெரிக்க அரசும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தலிபான்கள் ஃபாரா மாகாணத்தில் வான்வழித் தாக்குதல் நடத்தினர் மற்றும் குண்டஸ் மற்றும் பக்லான் ஆகிய மாவட்டங்களிலும் தலிபான்கள் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் தலிபான்களுக்கு அரசுப் படைகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளன.