வாஷிங்டன்
பாகிஸ்தானிய மக்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளைச் சந்திக்க அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பென்டகன் உயர்மட்டக் குழு அடுத்த வாரம் இஸ்லாமாபாத்தில் வருகை தர உள்ளனர். இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை அமெரிக்காவின் உதவி பாதுகாப்பு அமைச்சர் ராண்டால் ஷ்ரைவர் இன்று அறிவித்தார்.
அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வின்போது அமெரிக்கா உதவி பாதுகாப்பு அமைச்சர் ஷ்ரைவர் பாகிஸ்தானுக்கு பென்டகன் குழு வருகையின் அறிவிப்பை வெளியிட்டதாக தி நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் தூதரக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமெரிக்க உதவி பாதுகாப்பு அமைச்சர் கூறியதாவது:
பிராந்தியத்தில் அமைதியின் நோக்கத்தை அடைவதில் பாகிஸ்தான் தலைமையின் ஒத்துழைப்பை நாங்கள் பாராட்டுகிறோம்.
அமெரிக்க பாகிஸ்தான் உறவுகளில் வலிமையான தூண்களாகவும் அடித்தளமாகவும் இருப்பது இருதரப்பிலான ஆயுதப்படைகளுக்கு இடையிலான உறவுகள் ஆகும்.
பாகிஸ்தானிய மக்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளைச் சந்திக்க அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் உயர்மட்டக் குழு அடுத்த வாரம் இஸ்லாமாபாத்தில் வருகை தர உள்ளதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு பாதுகாப்புத்துறையின் உதவி அமைச்சர் ராண்டால் ஷ்ரைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஆசாத் மஜீத் கான் பேசுகையில், ''பாகிஸ்தான்-அமெரிக்க பாதுகாப்புத்துறை உறவுகள் இருதரப்பிலான உறவுகளின் ஒரு அடையாளமாகவே இருந்துள்ளன. பிராந்திய அமைதிக்கும் நமது பகிர்ந்துகொண்ட பாதுகாப்பு ஆர்வங்களை மேம்படுத்துவதற்கும் ஒரு காரணியாக நமது பாதுகாப்பு ஒத்துழைப்பும் கூட்டுறவும் எப்போதுமே இருந்து வருகிறது.''
இவ்வாறு அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் தெரிவித்தார்.
-ஐஏஎன்எஸ்
"Our defence cooperation and collaboration has always been a factor for regional peace and the
promotion of our shared security interests," he said.