உலகம்

பஹாமஸில் டோரியான் புயலுக்கு 20 பேர் பலி: 70,000 பேர் முகாம்களில் தங்கவைப்பு

செய்திப்பிரிவு

பஹாமஸ் தீவை புயல்தாக்கியதில் 20 பேர் பலியானதாகவும் இந்த தலைமுறையில் ஏற்பட்ட பேரழிவு என்று பிரதமர் ஹுமர்ட் மின்னிஸ் தெரிவித்துள்ளார்.

கரிபீயன் தீவுகளில் உள்ள பஹாமா மற்றும் அபகோ தீவுகளை டோரியான் புயல் செவ்வாய்க்கிழமை தாக்கியது. இதில் பெரும் சேதம் பஹாமா தீவுகளுக்கு ஏற்பட்டது. புயல் தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பஹாமஸ் ஏற்பட்ட புயல் பாதிப்பு குறித்து பஹாமா பிரதமர் கூறுபோது, “டோரியான் புயலுக்கு இதுவரை பஹாமஸில் 20 பேர் பலியாகி உள்ளனர். பஹாமா மற்றும் அபகோ தீவுகளில் இந்த தலைமுறைக்கான பேரழிவை ஏற்படுத்தி சென்றுள்ளது டோரியான் புயல்.

சுமார் 70-க்கு ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. அமெரிக்க பிரதமர் ட்ரம்பிடம் புயல் பாதிப்பு குறித்து பேசி இருப்பதாகவும், விரைவில் அவர் புயல் பாதித்த இடங்களை பார்வையிடுவார்” என்றும் தெரிவித்துள்ளார்.

பஹாமஸ்ஸில் சிக்கிக் கொண்ட மக்களை மீட்பதற்கு பிரிட்டன், அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் மீட்புப் படைகளை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நாட்டில் பல பகுதிகளில் தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மருத்துவம் மற்றும் நீர், உணவுப் பற்றாக்குறை உள்ளதால் பஹாமா நாட்டுக்கு உதவுமாறு வளர்ந்த நாடுகளை ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக் கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT