உலகம்

புளோரிடாவை நோக்கி டோரியான் புயல் 

செய்திப்பிரிவு

பஹாமா நாட்டைத் தாக்கிய டோரியான் புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

கரிபீயன் தீவுகளில் உள்ள பஹாமா மற்றும் அபகோ தீவுகளை டோரியான் புயல் தாக்கியது. இதில் பெரும் சேதம் பஹாமா தீவுகளுக்கு ஏற்பட்டுள்ளது. புயல் தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அங்கு மருத்துவம் மற்றும் நீர், உணவுப் பற்றாக்குறை உள்ளதால் பஹாமா நாட்டுக்கு உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக் கொண்டுள்ளது.

பஹாமா பிரதமர் ஹுமர்ட் மின்னிஸ் கூறும்போது, “நாங்கள் வரலாற்றுப் பேரழிவால் உண்டான சோகத்தில் உள்ளோம் 60% இழப்புகள் ஏற்பட்டுள்ளன. உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் பஹாமா நாட்டைக் கடந்த டோரியான் புயல் தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று சர்வதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புளோரிடா, கரோலினா மாகாண ஆளுநர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். எனவே இது தொடர்பான பணியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

SCROLL FOR NEXT