பிரபல காமிக்ஸ் கதாபாத்திரமான `ஆர்ச்சி’யை உருவாக்கிய கார்ட்டூனிஸ்ட் டாம் மூர், அமெரிக் காவின் டெக்ஸாஸ் மாகாணத்தி லுள்ள எல் பசோவில் திங்கள் கிழமை காலமானார். அவருக்கு வயது 86.
காமிக்ஸ் கதாபாத்திரங்களில், சிவந்த முடி மற்றும் முகத்தில் மங்கலான புள்ளிகளைக் கொண்ட ஆர்ச்சி, காமிக்ஸ் பிரியர் களிடையே மிகவும் பிரபலம்.
அமெரிக்காவில் ரிவர்டேல் என்ற ஊரில் வசிக்கும் ஆர்ச்சி ஆண்டிரூஸ் என்கிற ஒரு பதின்ம வயது பள்ளி மாணவனே ஆர்ச்சி தொடரின் நாயகன். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஆர்ச்சி தன்னுடன் படிக்கும் வெரோனிகா என்கிற பணக்கார மாணவியை விரும்புகிறான். நடுத்தர வர்க்க மாணவி பெட்டி ஆர்ச்சியை விரும்பு கிறாள்.
ஆர்ச்சிக்கு ஜக்ஹெட் என்ற நண்பன் உண்டு. ரெக்கி என்கிற சக மாணவனுடன் ஆர்ச்சிக்கு எப்போதும் ஒரு போட்டி நிலவும். டில்டன் என்கிற புத்திசாலி, மூஸ் என்கிற பலசாலி மாணவர்கள் ஆர்ச்சியின் வகுப்பில் உண்டு.
இன்றுவரை பெரும்பாலானவர் களின் மனம்கவர்ந்த கார்ட்டூன் பாத்திரங்களில் ஆர்ச்சிக்கு தனி இடம் உண்டு.
இந்த பாத்திரங்களை வரைந்து வடிவமைத்த கார்ட்டூ னிஸ்ட் டாம் மூர் காலமானார். தொண்டைப் புற்றுநோயால் கடந்த சில வாரங்களாக அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.
அமெரிக்காவுக்கும் கொரியா வுக்கும் இடையே நடந்த போரின் போது, டாம் மூர் அமெரிக்க கடற் படையில் பணிபுரிந்தார். அந்த காலகட்டத்தில் இவர் கார்ட்டூன்களை வரையத் தொடங்கினார்.
கொரியப்போருக்குப் பிறகு, மூர், ஜிஐ பில் மூலம் கிடைத்த நன்கொடையால், நியூயார்க்கில் உள்ள கார்ட்டூனிஸ்டுகளுக்கான பள்ளியில் படித்தார்.
பின்னர் 1941-ம் ஆண்டு பாப் மான்டானா என்பவரால் உருவாக்கப்பட்ட ஆர்ச்சி காமிக்குடன் இணைந்தார். பின்னர் 1953க்குப் பிறகு அதனை கையகப்படுத்தினார்.
கடந்த 1953-ம் ஆண்டு தொடங்கி 1988-ம் ஆண்டு வரை அவர் ஆர்ச்சி பாத்திரத்தை வரைந்து வந்தார். 1960-களில் ஆர்ச்சி காமிக்ஸ் 5 லட்சம் பிரதிகளுக்கும் அதிகமாக விற்பனையானது.
“ஒரு மாதத்துக்கு ஒரு காமிக் புத்தகம் எழுதுவேன்” என ஒரு முறை மூர் தெரிவித்துள்ளார்.
மூர் ஓய்வு பெற்ற பிறகு, காமிக் புத்தக நிறுவனம் ஆர்ச்சி பாத்திரம் இறந்துவிட்டதாக காட்ட முடிவு செய்தது. ஆனால், அதற்கு மூர் ஒப்புக்கொள்ளவில்லை.