உலகம்

அமேசான் காட்டுத் தீயை வெற்றிகரமாக அணைத்து வருகிறோம்: பிரேசில்

செய்திப்பிரிவு

அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை வெற்றிகரமாக அணைத்து வருவதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.

உலகின் நுரையீரல் எனக் கருதப்படும் அமேசான் உலக மக்களுக்கான 20 சதவீத ஆக்ஸிஜனை வழங்கி வருகிறது. இதன் மழைக்காடுகளில் காட்டுத் தீ கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக ஏற்பட்டுள்ளது. இதன் சேதம் கடந்த ஆண்டைவிட 87% சதவீதம் அதிகம் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக பருவநிலைகளில் எதிரான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அமேசானின் காட்டுத் தீயை தடுக்க பிரேசில் அரசு துரித நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தின. இந்நிலையில் ஜி -7 நாடுகளின் சந்திப்பில் அமேசான் ஒரு முக்கியப் பொருளாகப் பேசப்பட்டது.

மேலும் பிரான்ஸ், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்க பொருளாதார ரீதியாக பிரேசில் அரசுக்கு உதவத் தயார் என்று கூறியது.

இந்நிலையில் பிரேசில் அரசுடன் இணைந்து காட்டுத் தீயை அணைக்கத் தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பாக பிரேசில் அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என்று அமெரிக்கா கூறியது.

இதுகுறித்து பிரேசில் வெளியுறவுத் துறை அமைச்சர் எர்னஸ்டோ கூறும்போது, “பிரேசிலில் ஏற்பட்டு காட்டுத் தீயை வெற்றிகரமாக அணைத்து வருகிறோம். . அமேசான் காட்டுத் தீயை அணைப்பதற்கு பிற நாடுகளுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம்.

மேலும் அமேசான் காட்டுத் தீயை அணைக்க அமெரிக்க கூறிய உதவி தொடர்பான கவனத்தை செனட் சபைக்கு கொண்டு சென்று இருக்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக செனட் சபையின் ஒப்புதல் வேண்டிய காத்து இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT