உலகம்

காங்கோவை தொடர்ந்து அச்சுறுத்தும் எபோலா வைரஸ்: 2,000 பேர் பலி

செய்திப்பிரிவு

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இதுவரை 2,000 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு எபோலா வைரஸ் காங்கோவை தாக்கி பெரும் உயிர் சேத்தை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் எபோலா வைரஸ் தாக்கம் காங்கோவில் நீடித்து வருகிறது.

கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினி, லைபீரியா, சியாரா லியோன் உட்பட 8 நாடுகளில் எபோலா வைரஸ் பரவியது.

இந்த நிலையில், கிழக்கு காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிகை 2,000த்தைத் தொட்டுள்ளது என்று இது தொடர்பான தரவுகளை வெள்ளிக்கிழமை காங்கோ அரசு வெளியிட்டுள்ளது. மேலும் எபோலா வைரஸ் தாக்கதிற்கு சுமார் 3,000 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.

எபோலா வைரஸ் பொதுவாக விலங்குகள் மற்றும் பூச்சிகள் மூலம் பரவுகிறது. இதன் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, உடல் வலி ஆகியவை உள்ளன. நோயின் தாக்கம் அதிகமாக இருந்தால் வாந்தியில் ரத்த கசிவு ஏற்படும்.

தடுப்பூசிகள் மூலம் சுமார் 70,000 பேருக்கு மேல் இந்த நோய் பரவவலை தடுத்துள்ளது காங்கோ அரசு.

தொடர்ந்து எபோலா வைரஸுக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

இதற்கு முன்னர், கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினி, லைபீரியா, சியாரா லியோன் உட்பட 8 நாடுகளில் எபோலா வைரஸ் காய்ச்சல் பரவியது. இதில் எபாலோ வைரஸ் காய்ச்சலுக்கு 15,145 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 5,420 பேர் உயிரிழந்தனர்.

SCROLL FOR NEXT