பாரிஸ்
ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவேத் ஷெரிப் திடீரென ஜி7 உச்ச மாநாட்டில் கலந்து கொண்டதால் அமெரிக்க பிரதிநிதிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பிரான்ஸ் நாட்டின் பையாரிட்ஸ் நகரில் நாற்பத்தி ஐந்தாவது ஜி-7 மாநாடு நடைபெறுகிறது. சுற்றுச்சூழல், காலநிலை, பெருங்கடல் பிரச்சினைகள், டிஜிட்டல் பரிமாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விரிவான விவாதம் நடைபெறுகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, பிரிட்டன், ஜப்பான், இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகிய ஏழு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுடன் இந்த அமைப்பில் உறுப்பினராக இல்லாத இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
உலக அளவில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பெரிய அளவில் வர்த்தகப் போர் நடந்து வருகிறது. இதனால் உலக பொருளாதாரமே சுணக்கம் அடையும் சூழல் உருவாகியுள்ளது. அதுபோலவே ஈரான் விவகாரம் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
இந்தநிலையில் ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவேத் ஷெரிபும் திடீரென கலந்து கொண்டார். எந்த முன்னறிவிப்பும் இன்று அவர் கூட்டத்தில் பங்கேற்றதால் அமெரிக்க பிரதிநிதிகள் அதிர்ச்சியடைந்தனர். எனினும் பிரான்ஸ் அதிபர் மக்ரோனை சந்திப்பதற்காக வந்ததாக ஜாவேத் தெரிவித்தார்.
இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தொலைக்காட்சியில் நாட்டுமக்களுக்கு உரையாற்றுகையில் ‘‘ஈரானின் நலன் கருதி எந்த ஒரு முடிவு எடுக்கவும் உரிமை உண்டு. ஈரான் அமைச்சர்கள் உலகின் எந்த பகுதிக்கு செல்லவும், நாட்டுக்காக வாதிடவும் உரிமை உள்ளவர்கள். இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை’’ என தெரிவித்தார்.
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்