வடகொரியாவில் புதிதாக தயாரிக்கப்பட்ட மிக நீளமான ராக்கெட் லாஞ்சர் நேற்று முன்தினம் வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. இதையடுத்து வீரர்களுடன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். 
உலகம்

வடகொரியாவில் புதிதாக தயாரிக்கப்பட்ட மிக நீள ராக்கெட் லாஞ்சர் சோதனை வெற்றி

செய்திப்பிரிவு

சியோல்

வடகொரியாவில் புதிதாக தயாரிக்கப்பட்ட மிக நீளமான ராக்கெட் லாஞ்சர் நேற்று முன் தினம் வெற்றிகரமாக பரிசோதித் துப் பார்க்கப்பட்டது.

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வந்தது. இதையடுத்து அந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். அப்போது, அணு ஆயுத சோதனையை கைவிட கிம்மும் பொருளாதார தடையை விலக்கிக்கொள்ள ட்ரம்பும் ஒப்புக் கொண்டனர்.

எனினும், இது தொடர்பான அடுத்தடுத்த பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில், வடகொரியா வின் எதிரிகளான அமெரிக்காவும் தென்கொரியாவும் சமீபத்தில் ராணுவ கூட்டு பயிற்சியில் ஈடு பட்டன. இதனால் ஆத்திரமடைந்த வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரு கிறது. இதன்படி, புதிதாக தயாரிக்கப்பட்ட மிக நீளமான ராக்கெட் லாஞ்சரை வடகொரியா நேற்று முன்தினம் பரிசோதித்துப் பார்த்தது. அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த சோதனை வெற்றி பெற்றது. இந்தத் தகவலை அந்நாட்டு செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது. இது இந்த மாதத்தில் நடத்தப்பட்ட 7-வது சோதனை ஆகும்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

SCROLL FOR NEXT