உலகம்

குற்றவாளி பரிமாற்ற மசோதாவுக்கு எதிர்ப்பு: ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் போலீஸார் இடையே மோதல்

செய்திப்பிரிவு

ஹாங்காங்

ஹாங்காங்கில் தடையை மீறி போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் தடுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. அப்போது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.

சீனாவின் ஒரு அங்கமாக ஹாங்காங் உள்ளது. இருந்த போதிலும் அதற்கென தனிச் சட்டம் உள்ளது. இந்நிலையில் ஹாங்காங் அரசு, குற்ற வழக்குகளில் சிக்கு பவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் மசோ தாவை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ள பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தொப்பி, காஸ் மூகமூடியை அணிந்தபடி வுன் டாங் தொழிலக பகுதியில் நேற்று பேரணியாக சென்றனர். அப்போது அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர். அப்பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையம் முன்பு பேரணியாக சென்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதற்காக அங்கு தடுப்புகளை அமைத்திருந்தனர். ஆனால், தடுப்புகளை மீற முயன்றதுடன், போலீஸார் மீது கற்கள், மூங்கில் கம்புகளை வீசினர். இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீ ஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன் தடியடி நடத்தினர். இத னால் பலர் திரும்பிச் சென்றனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை போலீஸார் கைது செய்தனர். - ஏஎப்பி

SCROLL FOR NEXT