பிரேசில் காட்டுத் தீயை அணைக்க ஆயுதப் படை வீரர்களை அனுப்ப உத்தரவிட்டிருக்கிறார் அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சோனரோ தெரிவித்துள்ளார்.
அமேசானில் உள்ள மழைக் காடுகளில் கடந்த மூன்று வாரங்களாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதில் பல அரியவகை மரங்கள் மற்றும் விலங்குகள் பலியாகின. இதன் காரணமாக சமூக வலைதளங்களில் #SaveAmazon என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்ட் ஆனது.
அமேசானில் எற்பட்டுள்ள காட்டுத் தீ குறித்து பிரான்ஸ் அதிபர் மக்ரோன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் ஆண்டோனியா மற்று சினிமா, விளையாட்டுத் துறை பிரபலங்கள் பலரும் வருத்தம் தெரிவித்தனர்.
மேலும் பல நாடுகள் பிரேசில் மீது பொருளாதாரத் தடை விதிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து அமேசான் காட்டுத் தீ குறித்து உலக நாடுகள் யாரும் தலையிட வேண்டாம் என்று பிரேசில் அதிபர் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் அமேசான் விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அளித்த அழுத்தத்ததைத் தொடர்ந்து காட்டுத் தீயை அணைக்க ஆயுதப் படைகளை அனுப்ப உத்தரவிட்டிருக்கிறார் பிரேசில் அதிபர்.
பிரேசிலில் இந்த ஆண்டு மட்டும் 72,843 காட்டுத் தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் பாதிக்கும் அதிகமான தீ விபத்துகள் அமேசான் காட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குப் பிறகு சுமார் 9,000-க்கும் அதிகமான தீ விபத்துகள் அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 80% அதிகமாகும்.