உலகம்

அமெரிக்காவில் 4 கடற்படை வீரர்கள் சுட்டுக் கொலை: கொலையாளி தற்கொலை

பிடிஐ

அமெரிக்க கடற்படை தளத்துக்குள் புகுந்த துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி நான்கு வீரர்களைக் கொன்ற இளைஞர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முகமது யூசுப் அப்துல்லாஸீஸ் (24) என்ற இளைஞர்தான் இத்தாக்குதலை நடத்தியவர் என எப்பிஐ கண்டறிந்துள்ளது.

இவர் டென்னிஸ்ஸி பகுதியில் இரு ராணுவ மையங்கள் மீது தாக்குதல் நடத்தினார். இதில் 4 கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு காவலர், இரு கடற்படை வீரர்கள் காயமடைந்தனர்.

அதிபர் ஒபாமா இச்சம்பவத் துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத் துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

தனிநபர்கள் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடுவது அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. இத்தாக்குதலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

இது உள்நாட்டுத் தீவிரவாதம் என டென்னிஸி பகுதியின் தலைமை வழக்கறிஞர் பில் கில்லியன் தெரிவித்துள்ளார்.

கொலை செய்த அப்துல் லாஸீஸ் பள்ளி நாட்களில் மிகவும் சாதுவானவர் என அவருடன் படித்தவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் டென்னிஸ்ஸி பல்கலைக் கழகத்தில் பொறியியலில் பட்டம் பெற்றுள்ளார்.

SCROLL FOR NEXT