ஹாங்காங்கில் ஆயிரக்கணக்கில் குடும்பம்குடும்பமாக திரண்ட மக்கள் | படம்: ட்விட்டர் 
உலகம்

சீன அடக்குமுறைச் சட்டம்: குடும்பம் குடும்பமாக திரண்டு ஹாங்காங் மக்கள்பேரணி

செய்திப்பிரிவு

ஹாங்காங்

ஹாங்காங்கில் ஜனநாயகப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தங்களையும் இணைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கில் குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொண்டுவந்தது. இந்தப் புதிய சட்டத்தின் மூலம், ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கப்படுவார்கள்.

ஹாங்காங் விமானத்தில் திரண்ட பொதுமக்கள் | படம்: ட்விட்டர்

ஆனால், சட்டத் திருத்த மசோதா அறிமுகப்படுத்துவதற்கு முன்பிருந்தே, கடந்த மூன்று மாதங்களாக எதிர்ப்பு உருவானது. ஹாங்காங் எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் இறங்கினர். சமீபத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இன்று காலை ஜனநாயகப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக நடைபெற்ற குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் கலந்துகொண்ட பேரணி மிகவும் அமைதியாக நடந்தது. பலூன்கள் மற்றும் குழந்தைகளை ஏற்றிவரும் தள்ளுவண்டிகளும் நிறைந்து ஏதோ விழாக்கோலம் போல வண்ணமயமாகப் பேரணி காட்சியளித்தது. மிகவும் அமைதியான முறையில் இந்தப் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியில் 'டி பார் டிமான்ஸ்டிரேஷன்', 'ஏ பார் ஆர்ப்பாட்டம்', 'பி பார் புரொட்டெஸ்ட்' என்று குறிப்பிடப்பட்ட வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

''எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டும். அவர்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நாங்கள் குடும்பம் குடும்பமாக கலந்துகொண்டோம்'' என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT