உலகம்

அணுவுலை விபத்து ஏற்பட்ட செர்னோபிலிருந்து உருவாக்கப்பட்ட வோட்கா 

செய்திப்பிரிவு

அணு உலை விபத்தால் தடை செய்யப்பட்ட செர்னோபில் பகுதியிலிருந்து மதுபான வகைகளில் ஒன்றான வோட்காவை தயாரித்துள்ளது இங்கிலாந்து பேராசிரியர் குழு.

உக்ரைனில் அணு உலை விபத்தால் தடை செய்யப்ப்பட்ட பகுதியான செர்னோபில் பகுதியிலிருந்து கிடைத்த தானியம் மற்றும் தண்ணீரை கொண்டு வோட்காவை தயாரித்துள்ளனனர் இங்கிலாந்தில் உள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் குழுவினர். சூழல் குறித்த ஆராய்ச்சிக்காக இந்த வோட்காவை அவர்கள் தயாரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கதிரியக்கம் பாதிப்பு ஏற்பட்ட பகுதியிலிருந்து உருவாக்கப்பட்ட இந்த வோட்காவில் கதிரியக்க தன்மை இருக்கிறதா?என்று பல தரப்புகளிருந்து கேள்விகள் ஏழ அதற்கு பேராசிரியர்கள் பதிலும் அளித்துள்ளனர்.

செர்னோபிலிருந்து உருவாக்கப்பட்ட வோட்கா குறித்து பேராசிரியர் ஸ்மித் கூறும்போது, “ செர்னோபிலிருந்து உருவாக்கப்பட்ட வோட்காவில் எந்தவித கதிரியக்க தன்மையும் இல்லை. சவுத்தாம்ப்டன் பல்கலைகழகத்தில் உள்ள சோதனை கூடத்தில் நாங்கள் தயாரித்த வோட்காவை பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அவர்கள் அதில் எந்த கதிரியக்க தன்மையும் கண்டறியப்படவில்லை” என்றார்.

மேலும் பொருளாதாரத் ரீதியாக மிகவும் பாதிப்படைந்திருக்கும் உக்ரைனின் பகுதிகளுக்கு இந்த வோட்காவின் மூலம் கிடைக்கும் லாபத்தை அளித்து உதவ திட்டமிட்டிருக்கிறோம்.

செர்னோபில் அணு உலை விபத்து

1986 ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் அப்போது இணைந்திருந்த உக்ரைனின் செர்னோபில் அணு உலையில் பெரும் விபத்து ஏற்பட்டது.

அதிலிருந்து நான்காவது அணு உலை அதிக வெப்பத்தின் காரணமாக உருக ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து தீ ஏற்பட்டு அணுஉலை வெடித்தது

செர்னோபில் அணு உலையை உள்ளிட்ட சுமார் 4,000 சதுர கி . மீ பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. இந்த அணு உலையிலிருந்து வெளிப்பட்ட கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

வரலாற்றில் நடந்த மோசமான அணு உலை விபத்தாக செர்னோபில் அணு உலை விபத்து பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT