உலகம்

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

செய்திப்பிரிவு

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியது.

இந்த நிலநடுக்கம் குறித்து தைவான் அதிகாரிகள் “ தைவானில் இன்று (வியாழக்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகவும், ஆழம் 22 கிமீ ஆகவும் பதிவாகியது. தலைநகர் தைபே மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் நன்கு உணரப்பட்டது. இப்பகுதிகளில் சுமார் 2,000-க்கும் அதிகமான வீடுகள் நில நடுக்கத்தால் அதிர்ந்தன.” என்று தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த உடனடி தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை. நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு, ரயில்கள் ரத்து போன்றவை ஏற்பட்டுள்ளது. தைவானில் கடந்த 2016 ஆம் ஆண்டு தென்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100 பேர் பலியாகினர். 1999 ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 7. 6 என்ற அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்துக்கு 2000 பேர்வரை பலியாகினர்.

SCROLL FOR NEXT