உலகம்

சீனாவில் நீர் விளையாட்டு அரங்கில் திடீரென எழுந்த ராட்சச அலை: 44 பேர் காயம்

செய்திப்பிரிவு

சீனாவில் நீர் விளையாட்டுகள் அடங்கிய பூங்கா ஒன்றில் அமைந்துள்ள  நீச்சல் குளத்தில் திடீரென ஏற்பட்ட ராட்சச அலையால்  44 பேர் காயமடைந்தனர்.

பொழுதுபோக்கு  விளையாட்டுகள் சில  நேரங்களில் விபரீதமான விளைவை ஏற்படுத்து. இதற்கு சீனாவில் சமீபத்தில் நடந்த விபத்து எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.

சினாவில் ஷுயின் நீர் விளையாட்டு அரங்கில் பெரிய  நீச்சல் குளம் ஒன்று உள்ளது. அங்கு செயற்கையான முறையில் அலைகளை ஏற்படுத்தி மக்களுக்கு த்ரில்லான அனுபவத்தை அளித்து வந்துள்ளனர். இதில் சமீபத்தில் அலையை ஏற்படுத்தும் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறில் பெரிய அளவிலான  சுனாமி அளவிலான அலைகள் பெரும் வேகத்துடன் எழுந்து  மக்களை அடித்துச் சென்றன. இந்த விபத்தில்  44 பேர் காயமடைந்தனர். இதில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர்.

அலை பெருக்கெடுத்து வந்து  நீச்சல் குளத்தில் உள்ள மக்களை புரட்டி போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், இந்த விபத்தை தொடர்ந்து இந்த நீர் நிலையம் மூடப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. 
 

SCROLL FOR NEXT